Sunday, July 31, 2011

பலாப்பழத்தை அறுக்காமல்எத்தனை சுளைகள் இருக்கிறது என்று உங்களால்கூறமுடியுமா ?

நமது பழந்தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று உங்களுக்கு விடையினைத் தரும்.


பலாவின் சுளையறியவேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.


பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி அதை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு பலாப்பழத்தினுள் உள்ள சுளையாகும்.


காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களின் எண்ணிக்கை = 130
130 X 6 = 780
780/5 = 156
பலாப்பழத்தினுள் உள்ள சுளை =156


No comments:

Post a Comment